Untitled Document Sabaragamuwa Provincial Council
Untitled Document
National Creast සබරගමුව පළාත් සභාව සිංහල | English
Provincial Flag
SABARAGAMUWA PROVINCIAL COUNCIL
சப்பிரகமுவ மாகாண சபை
வெசாக் மலர் – சப்பிரகமுவ மாகாண மலர்
நாம் “வெசாக் மலர்” என அறிந்துள்ள உடவெடியா மலரின் விஞ்ஞானப் பெயர் "DENROBIUM MACCARTHAIAE" டென்ரோபியம் மெகார்தீ) ஆகும். அவ்வாறு பெயரிடப்பட்டது 1864ஆம் ஆண்டு இந்நாட்டிலிருந்து செயலாளர் நாயகமாகிய மெகார்தீ அவர்களின் மனைவியின் பெயரிலாகும்.

எங்களுக்கு பழக்கமான “வெசாக் மலர்” மழைக்காடுகளில் காணப்படும் மரங்களின் தண்களில் வளர்கின்றது. சிங்கராஜ மற்றும் சிறிபாத வனத்தில் இதனை அதிகமாகக் காணலாம்.

இதில் ஆணிவேர் காணப்படுவதில்லை. “ஓகிடாசே” குலத்துக்குச் சொந்தமான படரும் தாவரமாகும். வேர்கள் இரண்டு வகைப்படும். அவை மரங்களிலில் அல்லது கொடியில் சாய்ந்து காணப்படும் வேர்கள் மற்றும் தண்டுகளில் படர்ந்து தொங்கும் வேர்களாக விளங்குகின்றன. வேர்கள் வெள்ளை நிறத்தை ஒத்த ஊதா நிறமாகும். இலைகள் கடும் நிறத்தில் காணப்படுவது அதிக நீரை சேமித்து வைத்திருப்பதனாலாகும். இலையொன்று சுமார் 4-8 சென்றிமீற்றர் நீளமானதாகும்.

மலரின் நிறம் இளம் ஊதாவாகும். ஒரு கிளையில் 10-15 மலர்கள் காணப்படுகின்றன. இவை ஒரு மாதம் வரையில் உதிராது காணப்படும். வித்துக்கள் காற்றின் மூலம் பரவலடையும். ஒரு பங்கசைமையமாகக் கொண்டு வளர்ச்சியடையும்.

புத்தபெருமானின் தெமகுல இடம்பெற்ற வெசாக் மாதத்தில் மலர்கின்ற உடவெடியா மலருக்கு அக்கால சமூகம் “வெசாக் மலர்” எனப் பெயரிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் புத்தபெருமானின் பாத இலட்சினை பதிக்கப்பட்ட சமனலகூட மலைப் பிரதேசத்தில் இத் தாவரத்தை அதிகமாக அவதானிக்கக் கூடியமையும் முக்கியமான அம்சமாகும்.

சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள சூழல் அழிவினாலும், சூழல் பிரியர்கள் சூழலிலிருந்து அவற்றை அகற்றிச்செல்வதனாலும் “வெசாக் மலர்” வேகமாக அருகிச் செல்கிறது.

சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு அமைப்பினால் (IUCN) உலகில் அழிந்து செல்லும் அபாயத்துக்கு உட்பட்டுள்ள உயிர்கள் மற்றும் தாவரங்களில் இதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.மேலும் சிவப்புத் தரவுப் புத்தகத்திலும் (RED DATA BOOK) இது உள்ளடக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சினால் 2005ஆம் ஆண்டு மாகாண மலர்களைப் பிரகடனப்படுத்தப்படுத்தும் போது சப்பிரகமுவ மாகாண மலராக வெசாக் மலர் தேர்ந்தெடுக்கப்பட்டது.